இன்று டென்னிஸ் பிரிமியர் லீக் முதலாவது ஆட்டத்தில் பெங்கால் விசார்ட்ஸ் - ஹைதராபாத் ஸ்ட்ரைகர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஐபிஎல் போன்று டென்னிஸ் விளையாட்டுக்காக டென்னிஸ் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதன் ஐந்தாவது சீசன் தற்போது புனேவில் உள்ள பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் எட்டு அணிகள் பங்கு கொள்கின்றன.பங்கு பெறும் ஒவ்வொரு அணிக்கும் ஐந்து லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்கு செல்லும். அதன்படி இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் பெங்கால் விசார்ட்ஸ் - ஹைதராபாத் ஸ்ட்ரைகர்ஸ் அணிகள் மோதுகின்றன.