ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு திடீரென்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முதலில் கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பயங்கரவாதிகள் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் […]

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு திடீரென்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முதலில் கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பயங்கரவாதிகள் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தப்பியவர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu