நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதல் – 9 பேர் பலி

June 5, 2025

போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் தொடர்ந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பஸ் நிலையம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாக, பலர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் ராணுவத்தை இலக்காக்கி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறச் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ராணுவம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் மைராரி என்ற பகுதியில் […]

போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் தொடர்ந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பஸ் நிலையம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாக, பலர் காயமடைந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் ராணுவத்தை இலக்காக்கி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறச் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ராணுவம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் மைராரி என்ற பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பயணிகள் பஸ்சில் ஏறிய தருணத்தில், அங்கு பதுக்கி வைக்கப்பட்ட குண்டு வெடித்து 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu