அமெரிக்காவில், டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நலிந்து வரும் பொருளாதாரத்திற்கு மத்தியில், சலுகை விலையில், டெஸ்லா நிறுவனம் வாகனங்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளது.
குறிப்பாக, மாடல் 3 பெர்ஃபார்மன்ஸ் வெர்சனில், 1.9% விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதுவே, மாடல் எஸ் அடிப்படை மாடல் காரில் 5.6% விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், தேவைகளை தூண்ட விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், மாடல் எஸ் கார்களின் பேசிக் வெர்ஷன் 84990 டாலர்களுக்கும், பிளைட் வேரியன்ட் 104990 டாலர்களுக்கும் விற்பனையாகிறது. அதுவே, மாடல் 3 கார்களின் பேசிக் வெர்ஷன் 41990 டாலர்களுக்கும், பெர்ஃபார்மன்ஸ் வர்ஷன் 52990 டாலர்களுக்கும் விற்பனையாகிறது.