டெஸ்லா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெஸ்லா நிறுவனத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. டெஸ்லா வாகன விற்பனை குறைந்ததை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்பட்டு வரும் சூழலில், மூத்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது. சூப்பர் சார்ஜர் துறையின் மூத்த நிர்வாகி ரெபேக்கா டின்னோக்கி மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளுக்கான தலைவர் டேனியல் ஹோ ஆகிய இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கீழ் பணி செய்து வந்த பணியாளர்களும் நீக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், சூப்பர் சார்ஜர் பிரிவில் பணியாற்றி வந்த 500 பேர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பேட்டரி தயாரிப்பு துறையின் தலைமை அதிகாரிகள் ட்ரூ பக்லினோ மற்றும் ரோகன் படேல் ஆகியோர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.