டெஸ்லா லாபம் சரிவு - குறைந்த விலை வாகனங்களை தயாரிக்க முடிவு

April 24, 2024

டெஸ்லா நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 55% வீழ்ச்சி அடைந்துள்ளது. மார்ச் மாத இறுதி நிலவரப்படி, டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் 9% வீழ்ச்சி அடைந்து 21.3 பில்லியன் டாலர்களாகவும், லாபம் 1.13 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. டெஸ்லா நிறுவனம் தனது லாபத்தை அதிகரிப்பதற்காக புதிய உத்திகளை கையாள உள்ளது. குறிப்பாக, குறைந்த விலை வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மாடல் 2 என்ற பெயரில் சிறிய ரக […]

டெஸ்லா நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 55% வீழ்ச்சி அடைந்துள்ளது. மார்ச் மாத இறுதி நிலவரப்படி, டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் 9% வீழ்ச்சி அடைந்து 21.3 பில்லியன் டாலர்களாகவும், லாபம் 1.13 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது.

டெஸ்லா நிறுவனம் தனது லாபத்தை அதிகரிப்பதற்காக புதிய உத்திகளை கையாள உள்ளது. குறிப்பாக, குறைந்த விலை வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மாடல் 2 என்ற பெயரில் சிறிய ரக காரை வடிவமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் விலை 25000 டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது, இந்த காரின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கார் தயாரிப்புக்கு புதிய ஆலைகள் தேவையில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன், டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ டாக்ஸி ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu