எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், எஸ் மற்றும் எக்ஸ் மாடல் கார்களில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. வெறும் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டு வெளியாகியுள்ள இந்த வாகனங்கள், தங்கள் முந்தைய விற்பனை விலையில் இருந்து 10000 டாலர்கள் குறைவாக விற்கப்பட உள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் எஸ் மாடல் காரின் விலை 78490 டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில் எக்ஸ் மாடல் காரின் விலை 88490 டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. டெஸ்லா வாகனங்களின் விலை குறைப்பு குறித்து எலான் மஸ்க் கூறியுள்ளதாவது: “நிறுவனத்தின் விற்பனை உயர்வை முன்னோக்கி எடுத்துச் செல்லும் விதமாக, வாகனங்களின் விலையை குறைப்பதில் சிக்கல் இல்லை” என்பதாகும். அதன்படி, தற்போது விலை குறைவான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.