மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் ராக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் புதிய ராக்கெட் தயாரிக்க செலவு அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ராக்கெட்டை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஃபால்கன் வகை ராக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது மனிதர்களையும் விண்ணுக்குக் கொண்டு சென்று மீண்டும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பல முறை பயன்படுத்த முடியும். இதையடுத்து இந்தியா தற்போது இந்த வகை ராக்கெட்களை உருவாக்கி நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.