தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான விசா நடைமுறைகளை நிரந்தரமாக தளர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்து நாடு, சீன குடிமக்களுக்கு இலவச நுழைவு விசா அறிவித்திருந்தது. வரும் பிப்ரவரி மாதம் வரையில் இலவச நுழைவு விசா அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் மாதம் முதல் இரு நாட்டு குடிமக்களுக்கும் பரஸ்பரமாக இரு நாடுகளுக்குள் நுழைய விசா நடைமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விசா தளர்வு நிரந்தரமானது என கூறப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டைப் பொறுத்தவரை, சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், பல்வேறு நாட்டினருக்கு இலவச நுழைவு விசா வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.