தாய்லாந்து, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம், இந்தியர்கள் தாய்லாந்தில் எந்த விசாவும் இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கமுடியும். தாய்லாந்து அரசு இதற்கு முன்பு இந்த சலுகையை வரும் 11 ஆம் தேதி வரை மட்டுமே வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த சலுகையை காலவரையற்ற முறையில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்து உலகின் பிரபலமான சுற்றுலா இடங்களுள் ஒன்றாக திகழ்கிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். தாய்லாந்தில் சுற்றுலா செலவுகள் குறைந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினரும் இங்கு பயணிக்க விரும்புகிறார்கள். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20 சதவீதம் சுற்றுலாத்துறையிலிருந்து வரும் வருவாயாக உள்ளது. இதன் காரணமாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.