தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து மாஸ்டர் சூப்பர் 300 பேட்மிட்டன் தொடரில் இந்திய வீராங்கனை அரை இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.
தாய்லாந்து மாஸ்டர் சூப்பர் 300 பேட்மிட்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த அஷ்மிதா சாலிகா மகளிர் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தாய்லாந்து வீராங்கனை சுப நிடா கேட் தாங்க் உடன் மோதினார். இதில் அஸ்மிதா 13-21, 12 -21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து அரை இறுதியில் இருந்து வெளியேறினார்.