தன்னை மனதில் நினைத்து வாழ்வோரை தேடி தேடி வந்து அருளும் தேரையர்

தேரையர்‌ என்ற இவரது பெயர்‌, வெறும்‌ காரணப்‌ பெயர்‌ தான்‌. இவரது உண்மையான பெயர்‌ ராமதேவன்‌ என்று அபிதான சிந்தாமணி என்ற நூலில்‌ காணப்படுகிறது. இவர்‌ அகத்தியரின்‌ முதன்மையான மாணவர்‌ என்றும், தேரையர்‌ தம்‌ பெயரைத்‌ தேரன்‌ என்றே பல இடங்களிலும்‌ குறிப்பிட்டுள்ளார்‌ என்றும். கருதப்படுகிறது. தேரையர் பிறப்பை பற்றி சொல்லும் போது அவர் பாலாற்றின் வடக்கு கரையில்‌ உள்ள திருமலைச்சேரி என்னும் ஊரில் பிறந்தவர்‌ என்றும் அவர் தந்தை பெயர்‌ நம்பூபதி. இவர்‌ கூரம் என்ற […]

தேரையர்‌ என்ற இவரது பெயர்‌, வெறும்‌ காரணப்‌ பெயர்‌ தான்‌. இவரது உண்மையான பெயர்‌ ராமதேவன்‌ என்று அபிதான சிந்தாமணி என்ற நூலில்‌ காணப்படுகிறது. இவர்‌ அகத்தியரின்‌ முதன்மையான மாணவர்‌ என்றும், தேரையர்‌ தம்‌ பெயரைத்‌ தேரன்‌ என்றே பல இடங்களிலும்‌ குறிப்பிட்டுள்ளார்‌ என்றும். கருதப்படுகிறது.

தேரையர் பிறப்பை பற்றி சொல்லும் போது அவர் பாலாற்றின் வடக்கு கரையில்‌ உள்ள திருமலைச்சேரி என்னும் ஊரில் பிறந்தவர்‌ என்றும் அவர் தந்தை பெயர்‌ நம்பூபதி. இவர்‌ கூரம் என்ற இடத்தில் வாழ்ந்த தரும செளமியர்‌ என்ற புத்த மதத்துறவியிடம்‌ மருத்துவம்‌ பயின்றார்‌. அத்‌துறவியின்‌ வழிகாட்டுதலின்படியே மாமுனி அகத்தியரின்‌ சீடராக மாறினார்‌ என்றும் பல மருத்துவ ஆய்வு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்து.

அகத்தியர்‌ தகுந்த சீடன்‌ ஒருவரைப்‌ பெற வேண்டி பொதிகை மலையிலிருந்து இறங்கி ஊருக்குள்‌ வந்திருந்த நேரத்தில் ஒளவையாரை சந்தித்தார்‌. அப்போது அகத்தியரிடம் ஒளவையார்‌ ஒரு சிறுவனைக்‌ காண்பித்து இவன்‌ முற்பிறப்பில்‌ இராமதேவர்‌ என்ற சித்தராக இருந்தவன்‌. இப்போது இவன்‌ ஒரு வாய் பேசாத ஊமையாக என்னிடம்‌ வந்துள்ளான்‌. இவன்‌ உங்களுக்கு ஏற்ற சீடனாக இருப்பான்‌ என்று கூறினாராம். தேரன்‌ அகத்தியரின்‌ சீடனானான்‌. அகத்தியர் வைத்தியம்‌ பார்க்க எங்கு சென்றாலும்‌ தேரன் ஐயும் அழைத்துச் செல்வது வழக்கமாக்கி விட்டார்.

ஒருமுறை காசியை ஆண்ட, அரசன்‌ காசிவர்மன் வேட்டைக்குச்‌ குளத்தின் அடியில் ஓய்வெடுத்து காதுக்குள் தேரை போய் அவதிப்பட்டான்‌. தேரை வளர, வளர அவனது தலை வலியும்‌ நாளுக்கு நாள்‌ வளர்ந்தது.யாராலும். குணப்படுத்த முடியாத அந்த தலைவலியை போக அகத்தியரை அழைத்து வந்தனர். அவரது ஞானத்தால்‌ நடந்ததை உணர்ந்து கொண்ட அகத்தியர்‌.

அரசனுக்கு, கபால வெட்டு சிகிச்சை செய்தார். அதாவது கபாலத்தை, சில சிறப்பு வாய்ந்த மூலிகை மூலமாகத்‌ திறந்து, தேரையை எடுப்பது தான்‌ கபால வெட்டு சிகிச்சை இன்றைய காலத்தில்‌ open heart surgery என்று கேள்விப்பட்டு இருப்போம்‌. அந்த வகையில்‌ இது அந்தக் காலத்தில்‌ செய்யப்பட்ட open brain surgery என்று சொல்லலாம். அரசனுக்கு மொட்டை அடித்து, மண்டை ஓட்டை மூலிகை மூலமாக இலகுவாக்கி, அதனைத்‌ திறந்து பார்த்தார், மூளையின்‌, பிசு பிசுப்பில்‌ ஒட்டி இருந்தது ஒரு தேரை. எப்படி, இந்தத்‌ தேரையை, அரசனின்‌ மூளையில்‌ உள்ள நரம்பு மண்டலம்‌ பாதிக்காமல்‌ எடுப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் அகத்தியர்.

அப்போது அவரோடு வந்திருந்த ராமதேவனுக்கு தேரையை எடுக்கும்‌ சூட்சுமம்‌ புரிந்தது. ஒரு அகண்ட பாத்திரத்தில்‌ நீர்‌ கொண்டு வந்து தேரையின்‌ கண்ணில்‌ படும்‌ படியாக அதன்‌ அருகில்‌ கொண்டு சென்று, ஒரு சிறு குச்சியால்‌ அந்த நீரில்‌ சல சலப்பை ஏற்படுத்தினார்‌. நீரின்‌ சத்தம்‌ கேட்ட தேரை. அந்த நீரை நோக்கிப்‌ பாய்ந்து, குதித்தது. பின்‌ சந்தான கரணி என்னும்‌ மூலிகையைக்‌ கொண்டு அரசனின்‌ கபாலத்தை அகத்தியர்‌ உட்பட அவரது சீடர்கள்‌ அனைவரும்‌ பக்குவமாய்‌ மூடினார்கள்‌. அன்று முதல்‌ அந்த அரசனின்‌ தலைவலி முற்றிலும்‌ நீங்கியது. அவன்‌ அகத்தியருக்கு நன்றி தெரிவித்தான்‌. தனது சீடன்‌ ராமதேவனின்‌, அறிவு பூர்வமான செயலைப்‌ பார்த்த அகத்தியர்‌ அன்று முதல்‌ அவரைத்‌ தேரையர்‌ என்றே அழைக்க தொடங்கினார். அதோடு அவரின் பேச இயலாத தன்மையைப்‌ போக்கி தேரையர் ஐ நன்றாகப்‌ பேசவும்‌ வைத்தார்‌. இந்த வரலாறும்‌ அகத்தியர்‌ 12000 என்ற நூலில்‌ உள்ளது.

இப்படி பல அனுபவம் பெற்ற தேரையர்‌ நிறைநிலை சித்தராகவும்‌ மருத்துவராகவும்‌ வளர்ந்து விட்டதால்‌ அவரது குருநாதரே அவரைத்‌ தனித்திருந்து செயல்படும் படி கூறி ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்‌. தேரையரும்‌ நாகலா மலைப்பகுதிக்கு சென்று தனி தவக்குடில்‌ ஒன்றை உருவாக்கி கொண்டு அங்கிருந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்து கொண்டும்‌, சீடர்களை சித்த நெறியில்‌ வளர்ச்சி பெற வழி காட்டிக் கொண்டும்‌ வாழ்ந்து வந்தார்‌.

ஒரு பெரும் பஞ்சத்தில் மக்கள் தேரையரிடம் உதவி கேட்க அவர் அந்த மழையில் தங்க மலை ஒன்றை உருவாக்க அதை மக்கள் தீ வைத்து கொழுத்தியதால் அந்த மலையில் இருந்த உயிரினங்கள் அழிந்து போயின இதனால் கோபம் கொண்ட அகத்தியர்‌ தேரையரை அழைத்து வரச்செய்து அவரது கால்களைப் பிடித்து அவர்‌ உடலை இரண்டாகக்‌ கிழித்தெறிந்துவிட்டார்‌.

தனக்கு இப்படி ஒரு ஆபத்து வரக்கூடும்‌ என்பதை முன்னரே யூகித்து அறிந்திருந்த தேரையர்‌ தன்‌ முக்கிய சீடர்கள்‌ இருவருக்கு பிரிந்த உடல்‌ சேரவும்‌ மீண்டும்‌ உயிர்‌ பெற்று எழவும்‌ செய்யும்‌ மூலிகை மருத்துவத்தைக்‌ கற்றுக்கொடுத்திருந்தார்‌. அந்தச்‌ சீடர்களும்‌ தேரையர் கூறியிருந்தபடி மூலிகை மருத்துவம்‌ செய்து தங்கள்‌ குரு தேரையர் ஐ மீண்டும் உயிர்‌ பெற்று எழச்‌ செய்துவிட்டார்கள்‌.

பிழைத்தெழுந்த தேரையர்‌ மீண்டும்‌ குருவின்‌ கண்களில்‌ படாதவாறு தொலைவில்‌ உள்ள ஒரு இருண்ட காட்டில்‌ காட்டு மனிதனைப்போல்‌ வாழ்ந்து வந்தார்‌. அந்தக்‌ காலகட்டத்தில்‌ அகத்தியருக்குப்‌ பார்வைக்‌ குறைபாடு ஏற்பட்டது. அதற்கு காடு மேடு தேடி அலைந்து கண் வெடிச்சான் மூலிகை கண்டறிந்து அகத்தியர் நோயை குணமாக்கினர்.

மகிழ்ந்த அகத்தியர் அன்புத் தேரையனே நீ எனக்காக பொதிகை மலையில்‌ நடத்திய ஆராய்ச்சிகள்‌ அனைத்தையும்‌ தொகுத்து ஒரு மூலிகை மருத்துவ ஆய்வு நூல்‌ எழுது. அது வருங்கால மருத்துவ உலகிற்கு முன்னோடியாகவும்‌ வழிகாட்டியாகவும்‌ இருந்து வரும்‌. சித்த மருத்துவத்தில்‌ தேரையர்‌ மருத்துவம்‌ என்ற பெயரால்‌ தனிச் சிறப்புடன்‌ நிலைத்து நிற்கும்‌.” என்று மனமாற வாழ்த்தி அனுப்பினார்‌.

குருவின்‌ ஆணைப்படி தேரையர்‌ பல மருத்துவ நூல்கள்‌ எழுதியுள்ளார்‌. மொத்தத்தில், தேரையர் சித்தர் வாழ்வு நுட்பம், விடாமுயற்சி, பணிவு, இறையச்சம் ஆகிய அனைத்துக்குமே ஒரு சான்று போல அமைந்துவிட்டது. சில வரலாற்றுப் பிறழ்வு காரணத்தால்அகத்தியரின் சீடர் என்பதை சிலர் போகரின் சீடரே தேரையர் என்பர் இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேரையர் சமாதி தென்காசி மாவட்டம் கடையம் தோரண மலையில் அமைந்துள்ளது.அவரை மனதில் நினைத்து வாழ்வோர் யாருக்கும் தேடி தேடி வந்து நலம் அருள்வார் தேரையர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu