தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் நான் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அவ்வகையில் தமிழகத்தில் வறுமையை குறைக்கும் உதவும் விதமாக முதல்வரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 2024 - 25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது இந்த திட்டத்திற்காக ரூபாய் 27,922 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய ஐந்து லட்சம் பேரின் குடும்பங்கள் மேம்பாடு அடைய இந்த திட்டம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்துவகிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் இதன் மூலம் வழங்கப்பட உள்ளது