நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதனிடையே 35 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, பணவீக்கம் உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, வேலையின்மை விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப்தன்கர் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.