சட்டீஸ்கரில் 85வது காங்கிரஸ் மாநாடு இன்று துவங்குகிறது

February 24, 2023

சட்டீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு இன்று துவங்குகிறது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ இந்தாண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் சட்டீஸ்கர், ராஜஸ்தானில் […]

சட்டீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு இன்று துவங்குகிறது.

அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ இந்தாண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் சட்டீஸ்கர், ராஜஸ்தானில் கட்சி ஆட்சியில் இருக்கிறது. மத்திய பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் சில மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் திட்டம் பற்றியும் விவாதிக்கப்படலாம்’’ என தெரிவித்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu