ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில், குழந்தைகள், பெண்கள் உட்பட 223 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பர்கினோ பாஸோவில், அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் திட்டம் தீட்டி வந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, ராணுவத்தினர் அங்கு அனுப்பப்பட்டனர். அவர்கள், நான்டின், சோரா ஆகிய கிராமத்தில் வசித்து வந்த 56 குழந்தைகள் உட்பட 223 பேரை படுகொலை செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.














