சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்

March 20, 2023

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே, இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை […]

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.

2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே, இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளை நிதியமைச்சர் வாசித்து வருகிறார்.

நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்து வாசித்துவர எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் அப்பாவு நிதியமைச்சரின் உரையைத் தவிர எதற்கும் அவையில் தற்போது அனுமதியில்லை என்று கூறினார். இதனையடுத்து அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu