பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்க உள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் 2 பகுதிகளாக 27 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.














