சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மஹாராஷ்டிராவில் கடந்த 2019ல் நடந்த தேர்தலில் 76 சதவீத ஓட்டுகளை பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் ஷிண்டேவின் பக்கம் இருப்பதால் அவரது அணியே உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கியது.
இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை அரசியல் சாசன அமர்வில் உடனடியாக விசாரிக்கும்படி, உத்தவ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேற்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள் இந்த மனுவை இன்று மதியம் 3:30 மணிக்கு விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.