தமிழகத்திற்கு டிசம்பர் மாத இறுதி வரை 2700 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசிற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
டெல்லியில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 90 வது கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் தமிழ்நாடு, கர்நாடகா,புதுச்சேரி, கேரள மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் கர்நாடகத்தில் பருவமழையின் காரணமாக காவிரியில் வினாடிக்கு 5000 முதல் 8000 கன அடி வரை நீர் திறந்து விட்டனர். ஆனால் தர வேண்டிய பழைய நிலுவை அப்படியே உள்ள காரணத்தினால் இதுவரை தமிழகத்திற்கு 11 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவும், டிசம்பர் மாதம் 6 டி எம் சி தண்ணீர் என மொத்தம் 17 டி எம் சீ தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து நவம்பர்,டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடக திறந்து விட வேண்டும். மேலும் தமிழகத்திற்கு நாள் ஒன்றிற்கு 2700 கன அடி நீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.