டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்துடன் இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
டெல்லியில் வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விவசாயிகளின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தாலும் தடுப்புகளை மீறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய மந்திரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.