நாளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

December 29, 2023

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நாளை திறக்கப்பட உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வும், பயணிகளின் வசதிக்காக வும் புதிய பஸ் நிலையம் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 397 கோடி மதிப்பில் 2018 ஆம் ஆண்டு சென்னை வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்தின் பெரும்பாலான பணிகள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்சத்து 46 ஆயிரம் சதுர […]

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நாளை திறக்கப்பட உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வும், பயணிகளின் வசதிக்காக வும் புதிய பஸ் நிலையம் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 397 கோடி மதிப்பில் 2018 ஆம் ஆண்டு சென்னை வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்தின் பெரும்பாலான பணிகள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்சத்து 46 ஆயிரம் சதுர அடியில் நவீன தொழில்நுட்பத்தில் இரண்டு அடித்தளங்கள், தரைத்தளம், முதல் தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர கடைகள், உணவகங்கள், மருத்துவ மையம், பாலூட்டும் அறை, ஏடிஎம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. மேலும் முகப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற இந்த பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாளை மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu