கார்கே தலைமையில் காங்கிரஸ் செயற்குழு முதன்முறை கூடுகிறது

November 12, 2022

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் கூடவிருக்கிறது. இந்த செயற்குழுவில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், அஜய் மாக்கென், ரன்தீப் சூரஜ்வாலா, பிரியங்கா காந்தி வத்ரா, சுனில் கனுகோலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியே காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. […]

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் கூடவிருக்கிறது.

இந்த செயற்குழுவில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், அஜய் மாக்கென், ரன்தீப் சூரஜ்வாலா, பிரியங்கா காந்தி வத்ரா, சுனில் கனுகோலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியே காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிகாரமிக்க செயற் குழு ஒன்றை அறிவித்தது. அதன்படி அந்தக் குழு தனது முதல் கூட்டத்தை நாளை மறுநாள் நடத்தவிருக்கிறது. கார்கே தலைமைப் பதவியை ஏற்ற பின்னர் இந்தக் கூட்டம் முதன்முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu