டெல்லியில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது.
நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்தன. கடந்த 2019 ஆம் ஆண்டு வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த முறை வலிமையான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெறுகிறது. மேலும் காங்கிரஸுடன் அங்கம் வகித்த இந்தியா கூட்டணியும் 230க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்று சாதித்துள்ளது. நிலையில் நாளை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது. இந்தக் கூட்டம் மல்லிகார்ஜுனை கார்கே தலைமையில் நடைபெறுகிறது. இதில் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காரிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளன