பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணி மார்ச்சில் முடியும்

December 6, 2022

புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணியை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னையில் ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணியில் 333 தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்புதல் ஆகிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன பாலம் நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலமாக இருக்கும்.இது 2023 மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று […]

புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணியை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சென்னையில் ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணியில் 333 தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்புதல் ஆகிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன பாலம் நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலமாக இருக்கும்.இது 2023 மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.535 கோடி செலவில் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் மூலம் கடல் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தில் அதிக வேகத்தில் ரயில்களை இயக்கலாம். இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான போக்குவரத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu