நாடு முழுவதும் 543 தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.
நாட்டின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. அதன் அடிப்படையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேபோன்று தூத்துக்குடி, மதுரை, ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சி, கடலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் பெரும்பான்மையான இடங்களில் திமுக அதிக இடங்களை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது