ஜொமாட்டோ டிவிஎஸ் இடையே மின்சார ஸ்கூட்டர் ஒப்பந்தம்

June 29, 2023

பிரபல வாகன நிறுவனமான டிவிஎஸ், பிரபல உணவு விநியோக வர்த்தக நிறுவனமான ஜொமாட்டோ நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, ஜொமாட்டோ நிறுவனத்திற்கு மின்சார ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் வழங்க உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 10000 மின்சார ஸ்கூட்டர்களை வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சாலை போக்குவரத்தில் ஏற்படும் மாசுபாட்டை பெருமளவு குறைக்கவும், ஜொமாட்டோ நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த திட்டமிட்டது. அதன்படி, நிறுவனத்திற்கு தேவைப்படும் மின்சார ஸ்கூட்டர்களை […]

பிரபல வாகன நிறுவனமான டிவிஎஸ், பிரபல உணவு விநியோக வர்த்தக நிறுவனமான ஜொமாட்டோ நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, ஜொமாட்டோ நிறுவனத்திற்கு மின்சார ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் வழங்க உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 10000 மின்சார ஸ்கூட்டர்களை வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சாலை போக்குவரத்தில் ஏற்படும் மாசுபாட்டை பெருமளவு குறைக்கவும், ஜொமாட்டோ நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த திட்டமிட்டது. அதன்படி, நிறுவனத்திற்கு தேவைப்படும் மின்சார ஸ்கூட்டர்களை வழங்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, iQube ரக மின்சார வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu