தமிழகத்தில் முட்டை விலை ரூ.5.20 காசாக நிர்ணயம்

November 10, 2022

தமிழகத்தில் முட்டை விலை 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து 515 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 5 காசு உயர்த்தி 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதோடு 1 கிலோ 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைக்கோழி விலை எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் சென்னையில் 540 […]

தமிழகத்தில் முட்டை விலை 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து 515 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 5 காசு உயர்த்தி 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதோடு 1 கிலோ 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைக்கோழி விலை எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும் சென்னையில் 540 காசுகள் , ஐதராபாத் 485, விஜயவாடா 504, பர்வாலா 504, மும்பை 550, மைசூரு 525, பெங்களூரு 525, கோல்கட்டா 573, டில்லி 530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu