சிவசேனா சின்னம் குறித்து டிசம்பர் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை

November 29, 2022

சிவசேனா சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக முடிவெடுக்க வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சி இரு அணிகளாக உடைந்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா பிளவு பட்டுள்ளது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன. இதனால், சிவசேனா கட்சியின் சின்னத்தையும் பெயரையும் தேர்தல் ஆணையம் […]

சிவசேனா சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக முடிவெடுக்க வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சி இரு அணிகளாக உடைந்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா பிளவு பட்டுள்ளது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளன. இதனால், சிவசேனா கட்சியின் சின்னத்தையும் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பாக வரும் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. சிவசேனாவின் இரு அணிகளும் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி 5 மணிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றுதேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu