அமலாக்கத்துறை மீண்டும் அதிரடி

September 26, 2023

கடந்த சில நாட்களாக மணல் குவாரிகளை குறிவைத்து தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது மணல் குவாரிகளில் குறிவைத்து சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இதன் அடுத்த கட்டமாக ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட […]

கடந்த சில நாட்களாக மணல் குவாரிகளை குறிவைத்து தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது மணல் குவாரிகளில் குறிவைத்து சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இதன் அடுத்த கட்டமாக ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் 30 இடங்களிலும் நடத்திய சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்திட நிறுவனங்கள் முதலீடு செய்த பணம் எந்த வகையில் திரட்டப்பட்டது? முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதா? போன்றவற்றை தொடர்ந்து அமலாக்க துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து முழு விவரங்கள் விரைவில் வெளியில் தெரியவரும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu