கடந்த வருடம் ஐரோப்பிய விண்வெளி மையத்தால் Euclid என்ற தொலைநோக்கி விண்ணில் அனுப்பப்பட்டது. இந்த தொலைநோக்கி தற்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறது.
பூமியில் இருந்து 2.7 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Abell 2390 என்று அழைக்கப்படும் கேலக்ஸி கூட்டத்தை இந்த தொலைநோக்கி புகைப்படம் எடுத்துள்ளது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேலக்ஸிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 1300 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஓரியான் விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ள Messier 78 நட்சத்திரத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியுடன் Euclid தொலைநோக்கியின் தரம் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டார்க் மேட்டர் (dark matter) என்று அழைக்கப்படும் வினோதமான விண்வெளி பொருட்களை பற்றிய பல்வேறு தகவல்களை இந்த தொலைநோக்கி வழங்கி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.