ரெட்மி நிறுவனம் 300 வாட்சில் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம், ரியல்மி நிறுவனம், 240 வாட்ஸ் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட்டது. தற்போது, அந்த தொழில்நுட்பத்தை மிஞ்சும் வகையில் ரெட்மி நிறுவனத்தின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் வெளிவந்துள்ளது. ஆனால், இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச கைப்பேசிகள் கண்காட்சியில் பல புதிய தொழில்நுட்பங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அதிவேக சார்ஜிங் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவியின் டெமோ வீடியோ ஒன்று கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அதில், 4100 mAh பேட்டரி திறன் கொண்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி ஸ்மார்ட் போன், புதிய சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்பட்டது. அப்போது, 50% சார்ஜ் ஆக, 2 நிமிடங்கள் 11 வினாடிகள் ஆனது. மேலும், முழுமையாக சார்ஜ் ஏற, 5 நிமிடங்கள் எடுத்தது.