டெல்லியில் பாஜக ஆட்சியின் முதற்கட்ட சட்ட மன்ற கூட்டம் நடைபெற்றது.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடந்து முடிந்தது. பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, 70 தொகுதிகளில் 48 இடங்களை பாஜக கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது. 22 இடங்களுடன் ஆம் ஆத்மி அடுத்து வந்தது.
பாஜக சார்பில், பிப்ரவரி 20-ஆம் தேதி சாலிமார் பாக் தொகுதி எம்எல்ஏ ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார். எதிர்கட்சித் தலைவராக, ஆம் ஆத்மி சார்பில் கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் தலைமையில் நியமிக்கப்பட்டார். இந்தியாவில் ஆட்சிமாற்றத்தின் பின், டெல்லியில் முதற்கட்ட சட்டமன்ற கூட்டத் தொடர் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியது. இதில், பாஜக கேபினட் அமைச்சர்களாக பர்வேஷ் சிங், கபில் சர்மா, பங்கஜ் குமார், ஆசிஷ் சூட், மஞ்சிந்தர் சிங், ரவீந்தர் சிங் ஆகியோர் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.