3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து 254 பயணிகளுடன் முதல் ஹஜ் விமானம் சவுதிஅரேபியா புறப்பட்டு சென்றது.
3 ஆண்டுகளுக்கு பின் புனித ஹஜ் பயணத்திற்காக முதல் ஹஜ் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு 128 பெண்கள் உள்பட 254 பேருடன் புறப்பட்டு சென்றது. 2-வது விமானத்தில் 150 பேர் புறப்பட்டனர். சென்னையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 954 உள்பட 4 ஆயிரத்து 161 பேர் 19 விமானங்களில் புனித பயணம் செல்கின்றனர். நேற்று ஒரே நாளில் 404 பேர் புறப்பட்டு சென்றனர். அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், புனித ஹஜ் பயணத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கி முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார் என்றார்.