சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.
2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், கண்காணிக்கும் வகையிலும், ஒருங்கிணைக்கும் வகையிலும் போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது. அதில் 4 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில், பல்வேறு வகையான போக்குவரத்தை ஒருங்கிணைத்து செயல்படும் வகையிலான ஒரே பயண சீட்டு முறை அமல்படுத்துவது குறித்தான ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம், மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிகள் பயணிக்க இந்தமுறை ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.