சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு வாரணாசியில் நாளை தொடக்கம்

December 9, 2022

சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு வாரணாசியில் நாளை தொடங்குகிறது. டிசம்பர் 12-ம் தேதியை யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி சென்று சேர வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். இதையொட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில், வாரணாசியில் சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது. இதில், பல்வேறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்கள் உட்பட […]

சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு வாரணாசியில் நாளை தொடங்குகிறது.

டிசம்பர் 12-ம் தேதியை யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி சென்று சேர வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். இதையொட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில், வாரணாசியில் சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது. இதில், பல்வேறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்கள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த 1,200 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், சுகாதாரத்துக்கான 15-வது நிதிக் குழு மானியம், காசநோய், மலேரியா, தொழுநோய் ஓழிப்பு, ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu