பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் மார்ச்,ஏப்ரல்,மே மாதங்கள் கோடைகாலம் ஆகும். இக்காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் சில இடங்களில் வெப்ப அலை வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஜூன் வரை கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியா பகுதிகளில் இதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல் வாக்குப்பதிவு தினத்தன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் எனவும், இதனால் வாக்குச்சாவடிகளில் பந்தல் குடிநீர் போன்றவற்றை தேவையான அளவிற்கு ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.