இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் - அமெரிக்கா

January 24, 2023

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது அவரிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய, இந்தியாவுடனான பேச்சுவார்த்தை மற்றும் அதற்கு புதுடெல்லி தரப்பில் அளிக்கப்பட்ட பதில் ஆகியவற்றை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரைஸ் அளித்த பதிலில், தெற்காசிய பகுதியில் மண்டல ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என நாங்கள் நீண்டகாலம் அழைப்பு விடுத்து வருகிறோம். […]

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது அவரிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய, இந்தியாவுடனான பேச்சுவார்த்தை மற்றும் அதற்கு புதுடெல்லி தரப்பில் அளிக்கப்பட்ட பதில் ஆகியவற்றை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பிரைஸ் அளித்த பதிலில், தெற்காசிய பகுதியில் மண்டல ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என நாங்கள் நீண்டகாலம் அழைப்பு விடுத்து வருகிறோம். அதனையே பார்க்க நாங்களும் விரும்புகிறோம். வெகுவிரைவில் பார்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை என்பது அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். அவர்கள் இருவரும் தத்தமது சொந்த நிலைப்பாட்டில் உள்ளனர். எவ்வளவு விரைவாக, அதில் தீர்வு எட்டப்பட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான விவகாரம் ஆகும் என அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu