அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 82.69 ஆக இ௫ந்தது. பின்னர் ரிசர்வ் வங்கியின் தலையீட்டிற்குப் பிறகு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83.32 ஆக உயர்ந்துள்ளது.
டால௫க்கு நிகரான ரூபாய் மதிப்பு 82.67 என்ற அளவில் துவங்கி 82.33 ஆக இருந்தது. பின்னர் ரிசர்வ் வங்கியின் தலையீட்டிற்குப் பிறகு 82.69 ஐத் தொட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது முதலீட்டாளர்கள் சந்தை லாபத்தை பதிவு செய்ததால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தளர்வு இந்த மீட்புக்கு வழிவகுத்தது. அதன்விளைவாக டாலர் குறியீடும் 0.23 சதவீதம் உயர்ந்து 113.05 ஆக இருந்தது. இதற்கிடையில் ரூபாயின் சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியானது, அரசு நடத்தும் வங்கிகள் மூலம் டாலர்களை விற்றிருக்கலாம் என்று ஒ௫ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.