கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
உலக கோப்பை 2023 தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த வகையில் இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா அணி 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றும் இலக்குடன் களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் 16 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து இருந்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இந்தியா இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது.