ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது, காஸ்மிக் வெப் என்று அழைக்கப்படும் டரான்டுலா நெபுலாவைப் பார்க்கும்போது, ஏற்படக்௯டிய இதுவரை கண்டிராத இளம் நட்சத்திரங்களின் பட்டாளத்தைப் படம்பிடித்துள்ளது.
டரான்டுலா நெபுலா என்பது பால்வெளிக்குக்கு அருகில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களை உருவாக்கும் பகுதியாகும். இது பூமியிலிருந்து வெறும் 1,61,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
வெப் தொலைநோக்கியானது நட்சத்திரங்கள் தவிர விண்மீன் திரள்களையும், நெபுலாவின் வாயு மற்றும் அதிலுள்ள தூசியின் விரிவான அமைப்பு மற்றும் கலவையையும் படம் எடுத்தது. மேலும் வெப் தொலைநோக்கி இந்த நெபுலாவைப் பார்க்க அதன் மூன்று உயர்தெளிவு அகச்சிவப்பு கருவிகளைப் பயன்படுத்துகிறது. இது குறித்து ௯றிய நாசா , ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இதுவரை எவ௫ம் கண்டிராத பிரபஞ்சத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது என்று ௯றியது.