2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் ஜூலை 7-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
கர்நாடகாவில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 7-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை கடந்த மார்ச் மாதத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சட்டசபை தேர்தல் காரணமாக அந்த பட்ஜெட் அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையா 14-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.