கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது

கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னிமில் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர். பொதுக் கூட்டத்தை பொது மக்கள் அமர்ந்து பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான நாற்காலிகளும் மைதானத்தில் போடப்பட்டுள்ளது. இந்த […]

கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னிமில் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 10 தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர். பொதுக் கூட்டத்தை பொது மக்கள் அமர்ந்து பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான நாற்காலிகளும் மைதானத்தில் போடப்பட்டுள்ளது. இந்த பொதுக் கூட்டத்தை காண்பதற்கு சென்னை காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வர இருப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஏராளமான காவல்துறையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu