ஜப்பானில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது

ஜப்பானில் தொடங்கியுள்ள குமாமோட்டோ மாஸ்டர்ஸ் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். ஜப்பானில் நடைபெறும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்ட லக்ஷயா சென் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.பி.வி.சிந்து, சமீபத்தில் பயிற்சியாளர்களை மாற்றி, தனது சிறந்த நிலையை அடைய முயற்சிக்கின்றார். இந்த போட்டியில் அவர் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொள்கிறார். ஆண்கள் […]

ஜப்பானில் தொடங்கியுள்ள குமாமோட்டோ மாஸ்டர்ஸ் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

ஜப்பானில் நடைபெறும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்ட லக்ஷயா சென் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.பி.வி.சிந்து, சமீபத்தில் பயிற்சியாளர்களை மாற்றி, தனது சிறந்த நிலையை அடைய முயற்சிக்கின்றார். இந்த போட்டியில் அவர் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் போட்டி நடத்துகிறார்.இந்த போட்டியில் உலகின் முன்னணி வீரர்களான விக்டர் ஆக்சல்சென், குன்லாவுத் விதித்சரண், மற்றும் அசியாவின் சாம்பியன்கள் கலந்துகொள்கிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu