மக்களவை 34 சதவீத நேரம்தான் இயங்கியது

பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை வெறும் 34 சதவீத நேரம்தான் இயங்கியுள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு சிந்தனை அமைப்பு ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 133 மணி நேரத்துக்கு பதிலாக, வெறும் 45 மணி நேரம்தான் செயல்பட்டது. மாநிலங்களவை 130 மணி நேரத்துக்கு பதிலாக 31 மணி நேரம்தான் இயங்கியது. அதாவது […]

பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை வெறும் 34 சதவீத நேரம்தான் இயங்கியுள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து ஒரு சிந்தனை அமைப்பு ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை நிர்ணயிக்கப்பட்ட கால அளவான 133 மணி நேரத்துக்கு பதிலாக, வெறும் 45 மணி நேரம்தான் செயல்பட்டது.

மாநிலங்களவை 130 மணி நேரத்துக்கு பதிலாக 31 மணி நேரம்தான் இயங்கியது. அதாவது மக்களவை 34.28 சதவீத நேரமும், மாநிலங்களவை 24 சதவீத நேரமும் இயங்கி உள்ளது. இரு அவைகளிலும் அடிக்கடி கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் வெறும் 4 மணி 32 நிமிடங்களும், மாநிலங்களவையில் 1 மணி 55 நிமிடங்களும் மட்டும் கேள்வி நேரம் நடந்தது. மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் 14 மணி 45 நிமிடங்கள் விவாதம் நடந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu