பிரான்சில் இருந்து 698 பயணிகளுடன் தூத்துக்குடி வந்த சொகுசு கப்பல்

January 12, 2023

பிரான்சில் இருந்து 698 பயணிகளுடன் சொகுசு கப்பல் தூத்துக்குடிக்கு நேற்று வந்தது. ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 'அமீரா' என்ற சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் 204 அடி நீளம் கொண்டது. இதில் 13 அடுக்குகளுடன் கூடிய 413 அறைகள் உள்ளன. மணிக்கு 38 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த சொகுசு கப்பல் கடந்த மாதம் 22-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் துறைமுகத்தில் இருந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, […]

பிரான்சில் இருந்து 698 பயணிகளுடன் சொகுசு கப்பல் தூத்துக்குடிக்கு நேற்று வந்தது.

ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 'அமீரா' என்ற சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் 204 அடி நீளம் கொண்டது. இதில் 13 அடுக்குகளுடன் கூடிய 413 அறைகள் உள்ளன. மணிக்கு 38 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த சொகுசு கப்பல் கடந்த மாதம் 22-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் துறைமுகத்தில் இருந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த சுமார் 698 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டது. மால்டா, எகிப்து, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு கடந்த 8-ந் தேதி மும்பையை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் கொச்சிக்கும், நேற்று காலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு சொகுசு கப்பல் வந்தடைந்தது.

கப்பலில் இருந்து இறங்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சொகுசு கப்பல் இரவு 7 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. 25 நாடுகளுக்கு பயணம் செய்து வருகிற 26.4.2023 அன்று ஜெர்மனி பிரமேராவன் துறைமுகத்தில் சுற்றுபயணத்தை முடிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu