குஜராத்தில் மருத்துவக் கல்லுாரி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆமதாபாதில் மாநகராட்சிக்குச் சொந்தமான அரசு மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆமதாபாத்தில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சி தலைவர் ஹிதேஷ் பரோத், ''மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருத்துவக் கல்லுாரிக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படும்,'' என அறிவித்தார். கடந்த ஆண்டு ஆமதாபாதில் கட்டப்பட்ட பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.














