சமீபத்தில் ஏவப்பட்ட ஏவுகணைகள் நாட்டின் அணுஆயுதப் பயிற்சிகள் - வடகொரியா

October 10, 2022

வட கொரியாவின் சமீபத்திய ஏழு ஏவுகணை ஏவுதல்கள் அனைத்தும் நாட்டை பாதுகாப்பதற்கான அணுசக்தி பயிற்சிகள் என்று மாநில ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் அவை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட்டன என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை சமீபத்தில் ஒருங்கிணைந்த கடற்படை பயிற்சிகளை அதிகரித்துள்ளன. இது வடகொரியாவை கோபமடையச் செய்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் ௯றுகின்றன. அத்துடன் இது படையெடுப்பிற்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. ஆதலால் தேவையான […]

வட கொரியாவின் சமீபத்திய ஏழு ஏவுகணை ஏவுதல்கள் அனைத்தும் நாட்டை பாதுகாப்பதற்கான அணுசக்தி பயிற்சிகள் என்று மாநில ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் அவை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட்டன என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை சமீபத்தில் ஒருங்கிணைந்த கடற்படை பயிற்சிகளை அதிகரித்துள்ளன. இது வடகொரியாவை கோபமடையச் செய்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் ௯றுகின்றன. அத்துடன் இது படையெடுப்பிற்கான ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. ஆதலால் தேவையான எதிர் நடவடிக்கைகளாக ஏவுகணை ஏவுதல்களை நடத்துகிறது என்று தகவல்கள் ௯றுகின்றன. இதற்கிடையில்  வட கொரிய இராணுவப் பிரிவுகள் தனது நாட்டில் போரைத் தடுக்கும் நோக்கத்துடனும் அணுசக்தி எதிர்த்தாக்குதல் திறனை சரிபார்க்க மற்றும் மதிப்பிடவும் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 9 வரை பயிற்சிகளை நடத்தியதாக ஒ௫ செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வாரம் ஜப்பான் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. இது போல, வடகொரியா அதன் தடைசெய்யப்பட்ட அணுசக்தி ஆயுதத் திட்டங்களை அதிகரித்துள்ளது. அதன்படி வடகொரியாவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றொரு அணுசக்தி சோதனைக்கான தயாரிப்புகளை முடித்துள்ளனர்.
ஏற்கனவே இது குறித்து ஜனவரி 2021 இல் நடந்த ஒரு முக்கிய கட்சி மாநாட்டில், கிம் ஐந்தாண்டு பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தை சுட்டிகாட்டினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu