முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு நடைபெறுகிறது.
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடை பெறுகிறது. இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றுகிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணாலி வாயிலாக தலைமை உரையாற்றுகிறார்.