கடிகாரம் பயன்படுத்தும் புதிய வழிமுறை அமல் ஐசிசி அறிவிப்பு

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை பயன்படுத்த சோதனை நடைபெற்றது. அதன்படி பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கிடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே இந்த கடிகார முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் பந்துவீச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். […]

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை பயன்படுத்த சோதனை நடைபெற்றது. அதன்படி பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கிடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே இந்த கடிகார முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் பந்துவீச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். இதன் காரணமாக ஜூன் மாதம் நடைபெறும் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இந்த கடிகாரம் பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஐசிசியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட உள்ளது. இந்த விதிமுறை அமலுக்கு வரும் பொழுது மைதானத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் கடிகாரம் ஒளிபரப்பப்பட்டு ஒவ்வொரு ஓவர்களின் இடையில் 60 நொடிகள் தலைகீழாக செல்லும் காட்சிகள் இடம் பெற உள்ளன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu